தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக் காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தின் வெப்ப நிலையானது இயல்பை விட 5°© வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©- 20°© வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவாகும். எனவே நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் பனிப் பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

