நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.
12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்து வந்த மழை இன்று முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். இந்த மழை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். குமரி கடலில் உருவாகும் இந்த புதிய காற்று சுழற்சியின் காரணமாக இன்று தென் மாவட்டங்கள் முழுவதும் சிறப்பான மழையை பெறும். மழையின் போது பலத்த இடி மின்னல் இருக்கும்.
மின் வாரியத்திற்கு வேண்டுகோள்: இன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, ஆகிய தென் மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்புள்ளதால் மின்சார துறை தயார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.