“அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை” யின்தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது,  பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக 110 டிகிரியை தொட்டுள்ளது

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோயிலிருந்து   ஒவ்வொருவரும் கோடை காலங்களிலும் நீரினை தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவு பருக வேண்டும் என்பதை முன்னிட்டு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, திருச்சி புத்தூர் பிஷப் குளத் தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீரினை மண்பானையில் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.

யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா உள்ளிட்டோர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்  ஏற்பாட்டினை செய்து குடிநீரினை வழங்கி வருகிறார்கள். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

செய்தி: திருச்சி விஜய் —————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!