மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சந்திரா பாண்டி. இவர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.இவர் உயிருடன் இருந்த போது எருமார்பட்டி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அம்முமுத்தன்பட்டி கிராமத்தில் வீடுதோறும் ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்;தின் கீழ் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு பதிக்கப்பட்டுள்ளது.அவர் இறந்த பின் தற்போது தற்காலிக ஊராட்சி மன்ற தலைவராக் ராணி பெருமாள் என்பவர் பதவி வைத்து வருகின்றார். இந்நிலையில தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ராணி பெருமாள் கிராம மக்களிடம் எவ்வித முன் அறிவிப்பின்றி குடிநீர் இரும்பு பைப்பு குழாய்கள் அனைத்தையும் கழற்றியுள்ளார். மேலும் இதுகுறித்து கிராமமக்கள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செந்திலிடமும் கிளர்க்கிடமும் முறையிட்டுள்ளனர்.ஆனால் இது குறித்து அவர்களுக்கே தகவல் தெரிவிக்காமல் தற்காலிக தலைவர்; ராணி பெருமாள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.அதனால் அம்முமுத்தன்பட்டி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் குழாய்களை கழற்றி சென்றதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தலையிட்டு விரைவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment.