சங்கரன் கோவிலில் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 8-வது வார்டு வடகாசி அம்மன் கோவில் முதல் தெருவில் கடந்த 17 நாட்கள் தாமதத்தை அடுத்து நேற்று காலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இந்நிலையில் பெரும்பாலான வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் வரவில்லை.அதனைத் தொடர்ந்து சிறிதுநேரத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.முற்றுகையிட்ட பொதுமக்களிடம் நகரசபை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதன் எதிரொலியாக வடகாசி அம்மன் கோவில் முதலாவது தெருவில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது


You must be logged in to post a comment.