பழனி அருகே அ.கலையாமுத்தூர் ஊராட்சி அலட்சியத்தால் குடிநீர் வீணாகும் அவலநிலை..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அ.கலையமுத்தூர் ஊராட்சியில் 10-ஆவது வார்டு நாயக்கர் தோட்டம் என்னும் கிராமத்தில் சின்டெக்ஸ்டேங்க் அதிகம் பழுதடைந்து இருப்பதால் தண்ணீர் வீணாகி சாக்கடை கிணறு போல் நிரம்பி வழிகின்றது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றது.

மேலும் அதன் அருகே உள்ள குப்பை கிடங்கில் குப்பை நிறைந்து வழிவதால் நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதனை சரி செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் எடுத்துக் கூறியுள்ளனர். ஊராட்சி உதவி அலுவலர் குழந்தை வேலு சுகாதாரகேடை பார்த்துவிட்டு சென்று பல மாதங்களாய் ஆகிவிட்டது, ஆனால் சுகாதார கேடு நீங்கியபாடில்லை.

மேலும் இதனை சரி செய்ய சம்ந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் மனசு இறங்கி நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்களும் மக்களும் கேள்வியுடன், எதர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பழனி செய்தியாளர் ரியாஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!