குடி தண்ணீர் வசதி கூட இல்லாத பெரியகுளம் நகராட்சி..

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகராட்சி அலுவலகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கூட இல்லாத அளவுக்கு  சூழலை மோசமாக உள்ளது.   இங்கு  பேரிச்சம் ஏரியில் இருந்து நாள் ஒன்றுக்கு கன அடி வீதம் குடிநீர் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.  நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் தற்சமயம் பல நேரங்களாக பிரிக்கப்பட்டு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் தண்ணீர் பிடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் நகராட்சியின் கீழ் செய்யப்படுவது கிடையாது. அதே போல் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பயணிகளின் தாகம் தீர்ப்பதற்காக கோடைகாலம் மற்றும் இதர காலங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து நீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்சமயம்   பேருந்து நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளிலும் நீர் நிரப்பப்படுவது கிடையாது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சியில் வளாகத்தினுள் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மிஷினும் பழுதடைந்து உள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளதால் குடிநீர் இல்லாமல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முதல் அலுவலர்கள் வரை சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு செல்லக்கூடிய மின்சார வயரில் பழுது ஏற்பட்டு உள்ளதால் அந்த பழுதை சரி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு நகராட்சி தனது மெத்தனப் போக்கை காட்டி பொதுமக்களை குடிநீருக்காக அல்லல்படும் வைக்கின்றது.

மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 சாதிக்பாட்சா வருவார் நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!