கானல் நீரான, காவேரி நீர்? கிராமத்தினர் கனவு நினைவாகுமா??… அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள பூக்குளம் கிராமத்தில் காவிரி குடிநீர் தட்டுப்பாட்டால் இரவு பகலாக கண் முழித்து குடங்களை வரிசைப்படுத்தி தண்ணீருக்காக காத்திருக்கும் சம்பவம் வேதனையளிக்கிறது.

இக்கிராமத்திற்கு முதுகுளத்தூர் – சாயல்குடி செல்லும் பிரதான குழாயிலிருந்து, குருவிக்காத்தி, நெடுங்குளம் வழியாக இளஞ் செம்பூரிலிருந்து, கண்டிலான், வீரம் பல், பூக்குளம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சீராம வந்து கொண்டிருந்த குடிநீர் தற்போது வழித்தடங்களில் அனுமதியின்றி சிலர் பிராதான குழாயிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். கோடை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில், தற்போது அனுமதியின்றி சிலர் இணைப்புகளை உருவாக்கியுள்ளதால் காவேரி நீரே கானல் நீராக உள்ளது.

தங்களின் விவசாயத்தை விட்டு விட்டு, நகர்புறங்களில் குடிபெயரும் நிலை ஏற்பட்டுள்ளது என கிராமத்து பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர். அரசு அதிகாரிகள், சட்ட விரோதமான குடிநீர் இணைப்புகளை துண்டித்து பொது மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் உதவி:- மக்கள் டீம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!