அமெரிக்காவில், சிறுவனின் நாக்கில் மாட்டிக்கொண்ட தண்ணீர் பாட்டில் மூடியை, வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் டாக்டர்கள் அகற்றினர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளர் வூப் (33). சமீபத்தில் இவர் தனது 6 வயது மகன் ரிலேவுடன் கடைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். காரின் பின் இருக்கையில் மகனை அமர வைத்துவிட்டு கிளர் வூப் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.
திடீரென, பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் கத்தத் தொடங்கியுள்ளான். அதைக்கேட்டு திடுக்கிட்ட தாய் திரும்பி பார்த்தபோது, தண்ணீர் பாட்டில் மூடியில் உள்ள துவாரத்தில் சிறுவனின் நாக்கு சிக்கியிருந்துள்ளது.உடனடியாக காரை நிறுத்திய தாயார், நாக்கிலுள்ள மூடியை அகற்ற முயற்சி செய்துள்ளார். அது முடியாமல் போகவே, அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு மகனை கொண்டுசென்றுள்ளார். அதற்குள் சிறுவனின் நாக்கு வீங்கி, நிறம் மாறத்தொடங்கியுள்ளது. சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் மூடிக்குள் சிக்கியிருந்த நாக்கை மீட்டனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “மூடியின் துவாரத்திற்குள் சிக்கிக் கொண்டதால் நாக்கு நன்றாக வீங்கிவிட்டது. மூடியை சிரமப்பட்டுதான் வெட்டி எடுத்தோம். வலியால் துடித்துக்கொண்டிருந்த சிறுவன் பேசமுடியாமல் சிரமப்பட்டான். தற்போது, சிறிது சிறிதாக பேசுகிறான். இன்னும் ஓரிரு நாளில் சரியாகிவிடும்” என்றனர்.சிறுவனின் தாய் கிளர் வூப் கூறுகையில், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பும் பெற்றோர் அந்த பாட்டில்களை கவனமாக கையாளுவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









