சோழவந்தானில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னைமரம் உயரத்திற்கு பீய்ச்சி அடிப்பதால் வீணாகும் குடிநீர் ..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  ஆனையூர் பகுதிக்கு செல்லும் குடிநீர் பைப் சோழவந்தான் அருகே உடைந்து தென்னை மரம் உயர்த்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால்  குடிநீர் வீணாகிறது. இதில் வீணாக வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள காலிஇடத்தில்  பரவி கொசு உற்பத்திஆகிறது.   மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆனையூரூக்கு பெரிய குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்கின்றனர்.இங்கு குடிநீர் குழாய் உடைந்து சுமார் 12 அடிக்கு மேல் தண்ணீர் பீச்சி அடிக்கிறது. இதனால் அருகில் உள்ள காலி இடத்தில் தண்ணீர் பரவி கொசு உற்பத்தி ஆகிறது. 

இது மட்டுமல்லாது அருகில் உள்ள மின்கம்பத்தில் செல்லக்கூடிய வயரிலும் படுவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அந்த வழியாக செல்லக்கூடியவர்களை இந்த குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் நனைத்து விடுகிறது. இதனால் அவர்கள் அணிந்து செல்லக்கூடிய ஆடைகள் நனைந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீர் குழாய் உடைப்பை அடைத்து சரி செய்ய இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மின் வயரில் பட்டு ஆபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!