வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று(12.08.18) சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள , மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை கட்டுப்பாடு மையத்தில் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது ‘கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து ,வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து அதிக அளவில், நீர்
வெளியேற்றப் படுவதால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் , இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு நீர் வந்து சேரும். இதனால் தமிழகத்தின் காவிரி கரையோர மாவட்டங்களிலும் வெள்ள ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், மத்திய அரசு கடந்த 9 ஆம் தேதி, அறிவுறுத்தியது.
அதன்படி அன்றே ,காவிரி கரையோர மாவட்டங்களான தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலமும் பல்வேறு அறிவுறுத்தல்களும், முன் எச்சரிக்கையும் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ப்பட்டது.
சேலம்,ஈரோடு நாமக்கல் மாவட்டங்களில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 359 பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுகல், மற்றும் நெல்லை மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் ஆஙகாங்கே கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது
வங்காள விரிகுடா வடக்கு பகுதியில் குறிப்பாக வட கடலோர பகுதிகளில், மீன் பிடிக்க, மீனவர்கள் செல்ல வேண்டாம். வெள்ளம் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோரங்களுக்கு செல்லவேண்டாம் , நீச்சல் அடித்தல் , செல்பி எடுத்தல் பிற பொழுது போக்கு செயல்களில் ஈடுபடவேண்டாம்.
மேலும் அவசர உதவிக்கு 1077, 1070. ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்” அமைச்சர் உதயகுமார் கூறினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









