ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மாநில அளவிலான செயற்குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருட காலங்களாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.இதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 313இல் கூறப்பட்டது ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது கண்டித்தும், பொய்யான வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து, வருகின்ற 24.4.25 அன்று சென்னை சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகை இட போவதாக ராமநாதபுரம் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கடலாடி முருகேசன் தலைமையில் செயல் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்துணவு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.