கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலை கடற்கரையோர முக்கிய ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்தில் பெய்த கடும் மழையாலும் நெடுஞ்சாலை குண்டும், குளியுமாக மாறி பல விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தும் எந்த வகையான தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் வந்த சமயம் கூட எந்த பராமரிப்பும் செய்யாதது பொதுமக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வண்ணம் கீழக்கரையில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வரும் ஜனவரி 11/01/2025 அன்று காலை 6.45 மணியளவில் கீழக்கரை ஏர்வாடி முக்குரோடு சாலையில் தொடங்கி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவகம் வரை ஜனநாயக வழி நடைபயண கவன ஈர்ப்பு நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.