வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம்..

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், வடக்கு மவுண்ட் சாலையில் உள்ள ஐந்து வர்ணம் கிளைப் பள்ளிவாசல் முன்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முகமது மைதீன் (எ) ராசப்பா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முகமது உவைஸ் இறைவசனம் ஓதினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் தலைவர் கட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி செயலாளர் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல பொறுப்பாளர் முகம்மது ரஃபீக் தொடக்க உரையாற்றினார்.

 

தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர், தாருஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் ஷேக் அப்துல் காதர், விசிக மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்திக், மஜக மாநில துணைச் செயலாளர் அலிஃப் பிலால், ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், தேசிய லீக் மாநில செயற்குழு உறுப்பினர் வாவாசி ஜலீல், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மஹ்மூத், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்டச் செயலாளர் சாதிக் அலி, நன்னகரம் ஏசிஏ சர்ச் பாதிரியார் ஆரோக்கியசாமி, விசிக மாநில ஊடகப் பிரிவு ஆஷிக் உசேன், 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரபீக், கடையநல்லூர் இஸ்லாமியா அரபிக் கல்லூரி முதல்வர் சவுக்கத் அலி உஸ்மானி, ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில் வேல், மாநில விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, முன்னாள் வக்ஃப் வாரியத் தலைவர் ஹைதர் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

ஜாக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் ஃபிர்தவ்ஸி, வேம்படி பள்ளிவாசல் தலைவர் இஞ்சி இஸ்மாயில், செய்யது சுலைமான் பள்ளிவாசல் தலைவர் பஷீர், மஸ்ஜிதுல் அஹத் பள்ளிவாசல் தலைவர் செய்யது அலி, மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் தலைவர் சுல்தான் அலாவுதீன், ஐந்து வர்ணம் பள்ளிவாசல் தலைவர் செய்யது சுலைமான் பஷீர், உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் தலைவர்கள், ஐமுமுக மாவட்ட தலைவர் ஹயாத் அன்ஸர், திமுக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் அப்துல் ரஹீம், மஜக மாவட்ட தலைவர் ஆதம் ஹனீபா, சமூக ஆர்வலர் முகமது யாகூப், திமுக நகர பொருளாளர் ஷேக் பரீத், விசிக நகர தலைவர் ஹக்கீம், த.வா.க மாவட்ட தலைவர் முகைதீன், சி.பி.எம் அய்யூப்கான், 21 வது வார்டு கவுன்சிலர் அபூபக்கர், சதாம் ஹுசைன், பீரப்பா, ஷேக் அப்துல் காதர், செய்யது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கண்டன பொதுக் கூட்டத்தில், பொய்யான காரணங்களைக் கூறி இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள வக்ஃப் வாரியத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசர அவசரமாக நள்ளிரவில் நிறைவேற்றியுள்ள வக்ஃப் திருத்த சட்த்தை ஒன்றிய பா.ஜ.க.அரசு திரும்பப் பெற வேண்டும், சட்டப்பிரிவு 40-ஐ ரத்து செய்வதன் மூலம் வக்ஃபு சொத்துக்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃபு வாரியத்திடம் இருந்து பறித்து, வக்ஃபு சொத்துக்களை அரசு கையகப்படுத்த வழிவகுக்கும் இந்த புதிய திருத்த சட்டத்தை ஒன்றிய பி.ஜே.பி. அரசு கைவிட வேண்டும்.

 

வக்ஃபு வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் முன்பு போல் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் 1995-ன் வக்ஃபு சட்டம் எந்த மாற்றமும் இன்றி தொடர வேண்டும் என்றும், பாபர் மஸ்ஜிதை இடித்து விட்டு கோயில் கட்டியது, C.A.A.சட்டம் கொண்டு வந்தது, மாட்டுக் கறி அரசியல் செய்து அப்பாவி முஸ்லிம்களை அநியாயமாக கொல்வது, முத்தலாக் சட்டம், புல்டோசர் கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது, கோலி போன்ற பண்டிகையின் போது தொழுகையை தடை செய்வது, முஸ்லிம்கள் பண்டிகை நாட்களில் விடுமுறையை ரத்து செய்வது, ஹிஜாப், லவ் ஜிஹாத் என்று கூறி வன்முறையைத் தூண்டுவது என இவ்வாறு ஒன்றிய பா.ஜ.க. அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் தொடுப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை குறுக்கு வழியில் பறித்து, முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து சட்டம் இயற்றுவதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

 

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திமுக அரசையும், வழக்கு தொடுத்த காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விசிக, மமக, எஸ்டிபிஐ, தாவெக, உள்ளிட்ட கட்சிகளையும் மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற சமுதாய அமைப்புகளையும் இம்மாநாடு மனமார பாராட்டி நன்றி தெரிவிப்பதுடன் இச்சட்டம் முழுமையாக திரும்பப் பெறும் வரை இந்த சட்டப் போராட்டத்தை மேற்படி கட்சிகள் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் வாப்பா சேட் நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!