வக்ஃப் போர்டு தலைவராக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தேர்வு.. சரித்திரம் திரும்புமா?? மாறுமா??.. கீழக்கரை பிரமுகர்கள் வாழ்த்து ..

தமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இன்று அதிமுக கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இவருடைய வெற்றியை வாழ்த்தி தமிழகத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் மற்றும் கீழக்கரை பைத்துல்மாலின் துணை தலைவருமான ரஃபீக் சாதிக் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வக்ஃபு போர்டு பதவி என்பது அமைச்சர் அந்தஸ்த்துக்கு சமமான பதவியாகும். இஸ்லாமிய சமுதாயத்தின் அமானித சொத்துக்களை பராமரிக்கும் பணியாகும்.  இப்பதவியில் தடம் பதித்தவர்களும் உண்டு, தடம் புரண்டவர்களும் உண்டு.  பொறுத்திருந்து பார்ப்போம் புதிய சேர்மனின் தமிழ்நாடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்த அளவு நன்மை பயக்கும் என்பதை??

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!