தூத்துக்குடி மாநகராட்சியின் (WhatsApp ) பொது மக்களுக்கான வாட்சப் புகார் தளம் முடக்கம்.நேரில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தெரிவிக்க முன்னாள் கமிஷனராக இருந்த அல்பி ஜான் வர்க்கீஸ் [email protected] என்ற இ.மெயில் ஐ.டி.யும், 7397731065 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.மேலும் தினமும் அலுவலக நேரத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நேரிலும் ஆணையாளரை சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என ஆணை யாளர் அல்பிஜான் வர்க்கீஸ் அறிவித்திருந்தார்.இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக 60 – வார்டுகளுக்குரிய அடிப்படை தேவைகளுக்கான புகாரை ஆனையாளரிடம் நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக இன்றைய இனையதள சேவையின் வாயிலாக மாநகராட்சிக்கு புகார் அனுப்புவதற்காக மட்டும் புதிய வாட்சப் புகார் தளம் என்ற ஒன்றை இந்த +91 7397 731 065 எண்ணில் மாநகராட்சி நிர்வாகம் இதை தொடங்கியது. இதை பார்வையிட்டு பதிவு செய்து கொள்ள தனி ஊழியரும் நியமிக்கப்பட்டதாக தகவலும் சொல்லப்பட்டது.
இதனடிப்படையில் இந்த வாட்சப் தளத்தில் பதிவு செய்யப்படக் கூடிய ஒவ்வொரு வார்டுக்குரிய தேவையான புகாரை ஆனையா ளரின் நேரடி பார்வைக்கு உடனடியாக கொண்டு சென்று பதிவு செய்யப்பட்ட புகாரின் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக பார்வர்டு செய்யப்பட்டு , அவர்களது பரிசீலனையின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகாருக்கு உடனடியாக தீர்வும் காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நன்மைகளை பெறுவதற்கு இத்தளம் மிகவும் உதவியாக அமைந்து இருந்தது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக இந்த தளம் முடக்கி வைக்கப்ப்டுள்ளது, இதில் அளிக்கப்படும் புகார்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.இது குறித்து இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை அமைப்பாளர் ஷேக் முகம்மது கூறுகையில் “திடீரென கடந்த 20 நாட்களாக இத்தளம் எந்தவிதமான காரணமும் இன்றி முடக்கி வைக்க ப்பட்டுள்ளது , முடக்கப் போவதற்கு முன் அறிவிப்பு தகவல் ஏதும் இன்றி அதிரடியாக முடக்கி வைக்கப்பட்டதும் கண்டனத்துக்குரிய செயல்பாடாக அமைந்துள்ளது.இறுப்பினும் முடக்கி வைக்கப்பட்ட தகவலை மாநகராட்சி ஆனையாளர் அலுவலக நிர்வாகிகளிடமும், அவருடைய உதவியாளரிடமும் நேரடியாக வாய் மொழி தகவலாக தெரிவிக்கப்பட்டது.. ஆனாலும் முடக்கி வைக்கப்பட்ட வாட்சப் தளம் இதுவரையில் செயல்பாட்டிற்கு வரவும் இல்லை , பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவும் இல்லை” என்றார்”புகார் குறித்து மாநகராட்சி ஆணையாளர் வி.பி. ஜெயசீலன் IAS அவர்களை தொடர்பு கொண்டோம் அவர் கூறுகையில்:- மேற்படி வாட்ஸ்அப் எண் முடக்கப்படவில்லை, தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றது, அதற்கான நடவ டிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது, பொது மக்கள் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலோ, எனது கவனத்துக்கு கொண்டு வராமலோ இருந்தால் குறிப்பிட்ட அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் இது தொடர்பாக என்னை நேரில் சந்தித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் பொது மக்களுக்கான நல்லதொரு திட்டத்தை கீழ் நிலை அதிகாரிகள் முடக்கி வைப்பதை நிறுத்தி விட்டு , உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து அதை நடைமுறை படுத்தி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்பது பொதுமக்களின் கோரிக்கை
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









