வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்.
.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது.ஸ்டாலின் ஆட்சி கனவு ஒரு போதும் நிறைவேற போவது இல்லை.அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்.ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும்.தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு.கிராமப்புற மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியிலிருந்து வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












