இராமநாதபுரம் மாவட்டத்தில் சில வருடங்களாகவே சரியான பருவ மழை இல்லாததால். தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதை கண்கூடாக பார்க்கின்றோம்.இந்த நிலை மாறி தொடர்ந்து மழை கிடக்க அனைத்து மக்களும் தம்மால் இயன்ற அளவு ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்பதை நமது ஆவளாக உள்ளது.மரம் நடும் பணியை மாணவர்கள் மத்தியில் எடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கீழக்கரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களிடத்தில் மரம் வளர்ப்பை ஆர்வபடுத்துவது சம்பந்தமாக பேசப்பட்டது.
சந்திந்த பள்ளிகளில் தங்களது பள்ளிகளுக்கு மரங்களை தாருங்கள் மாணவர்களை வைத்து மரம் வளர்ப்போம் என்று சொன்னது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் சந்தித்த பள்ளிகளில் சில பள்ளிகளில் தண்ணீர் வசதி முற்றிலும் இல்லாத நிலையாக இருப்பதால் கிணறு அல்லது போரீங் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். மேலும் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த தொலைக்காட்சி பெட்டி ஏற்ப்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள்.
இந்த பணியில் மற்ற்வர்களும் பங்களிப்பை வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தெற்கு கிளையின் நிர்வாகத்தை 7358930033 எண்ணில் தொடர்பு கொள்ளுமாரு கேட்டுக்கொண்டார்கள்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









