தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை உடனே அனுப்ப கேரளா முதல்வருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கடிதம்.

விருதுநகர் தொகுதியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் மையங்கள் உள்ளன.இதற்கு முக்கிய மூலப்பொருள்கள் கேரளா மாநிலத்திலிருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகிறது.தமிழக அரசு அரசானை எண் 371 dt 08.05.2021 தேதியிட்ட நகலில் உற்பத்தி செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளது.இதில் பெண்கள் ஏராளமானோர் இந்த தொழிலில் கூலி தொழிலாளியாக ஈடுபட்டு வருகின்றனர்.கேரளா அரசு தற்போது உற்பத்தி செய்வதற்கும் மற்றும் தாங்கள் மாநிலத்தில் உள்ள மூலப்பொருளின் கைஇருப்புகளை விற்பனை செய்வதற்கும் கொரோனாவால் தடை விதித்திருப்பதாக அறிகிறேன்.தற்போது அனைத்து தொழிற்சாலைகளிலும் மூலப்பொருள் மூன்று நாட்களுக்கு மட்டுமே உள்ளது.இது தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி உள்ளது.ஆகையால் தாங்கள் தயவு கூர்ந்து தடையை நீக்கி தீக்குச்சி மூலப்பொருளை தங்கு தடையின்றி உற்பத்தி செய்வதற்கு ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இதன் மூலம் சிவகாசி, விருதுநகர்; சாத்தூர் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள லட்சகணக்கான கூலி தொழிலாளர்கள் வேலை பெறுவார்கள் என்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!