காவலர்களுக்கு தற்காப்பு மற்றும் மன உறுதியை மேம்படுத்த யோகா மற்றும் கராத்தே பயிற்சி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உட்கோட்ட சரக காவல் நிலைய பகுதியில் உள்ள காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின்பேரில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் ஆய்வாளர்கள் பார்த்திபன் முத்துக்குமார் சங்கர் கண்ணன் பவுல் எசுதாஸ் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தேவமாதா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 270 காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே மற்றும் மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக யோகா பயிற்சிகள் நடைபெற்றது. இதில் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மற்றும் கராத்தே கற்றுக் கொண்டனர். யோகா மற்றும் கராத்தே பயிற்சிகளை தளவாய்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் மற்ற காவலர்களுக்கு செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.இந்த பயிற்சியில் கலந்துகொண்ட காவலர்கள் கூறும்பொழுது, தங்கள் பணியில் உள்ள பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக யோகா பயிற்சி அமைந்ததாகவும், தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து காவலர்களும் தற்காப்பு கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த கராத்தே பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!