முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு..

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுர தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹீ (IAS), தலைமையில் இராமநாதபுர அண்ணா பல்கலைக்கழகத்தில் 2501/2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் K.வீரராகவராவ் பங்கேற்று, இளைஞர்கள் அனைவரும் ஓட்டு போடவும், நூறு சதவீகிதம் ஓட்டு போடுமாறும் சிறப்புரை ஆற்றினார். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. அதில் எமது கல்லூரியின் சார்பாக, ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் செல்வி S.துர்கா அவர்கள் தலைமையில் ஏழு மாணவிகள் கொண்ட குழு, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும், நூறு சதவீகிதம் ஓட்டு அளிக்க வேண்டும், படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஒப்பனை நாடகம் நடித்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இறுதியாக தேசிய கீதத்துடன் இனிதே நகழ்ச்சி நிறைவுற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!