கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இன்று 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஜூல்ஃபி, காதர், ஃபஹத், சஃப்வான், சுஹைல், ரிதுவான் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 02:30 மணி வரை நடைபெற்ற முகாமில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெற்றனர். முகாமின் ஒருங்கிணைப்பாளர் ஜூல்ஃபி கூறுகையில் புதிய வாக்காளர்களாக இணைய அதிகமான இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்ததாக தெரிவித்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









