கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா..

நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தமிழக அரசின் தேர்தல் துறை இணைந்து தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் மினி மாராத்தான் ஓட்டம், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி, மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் மேலும் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கடந்த 22ந்தேதி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஐந்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 23ந்தேதி அன்று 2வது நிகழ்ச்சியாக எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்திலிருந்து கோவில்பட்டி பயணியர் விடுதி வரை “வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்த மாராத்தான்” நடைபெற்றது. இம்மாராத்தான் போட்டியை கோவில்பட்டி கோட்டாச்சியர் விஜயா மற்றும் நேசனல் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சண்முகவேல் தொடங்கி வைத்தனர். இவ்விழிப்புணர்வு மாராத்தானில் நேசனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி பயணியர் விடுதியில் மாராத்தான் நிறைவுற்றதைத்; தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மனிதச்சங்கிலி நடத்திக் காட்டினர்.

நேற்று 3வது நாள் நிகழ்ச்சியாக வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தில் கையொப்பமிட்டு “வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை” கோவில்பட்டி கோட்டாச்சியர் விஜயா ஆரம்பித்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். மேற்படி அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோவில்பட்டி வட்டாச்சியர் பரமசிவம் மற்றும் துணைவட்டாச்சியர் இராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் முனைவர் கே.என்.கே.எஸ்.கே. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சண்முகவேல் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ – மாணவியர்கள் செய்திருந்தனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!