இராமநாதபுரம், அக்.28 – இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர்விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்டார். இதன்படி 4 சட்டமன்றத் தொகுதிகளில் 5,73,462 ஆண், 5,78,771 பெண், மூன்றாம் பாலினத்தவர் 69 பேர் என 11,52,302 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன் ஜன 5ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 5,75,546 ஆண், 5,81,268 பெண், மூன்றாம் பாலினத்தவர் 68 பேர் என 11,56,882 வாக்காளர் இருந்தனர். ஜன. 5 ஆம் தேதிக்குப் பின் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், 4,951 ஆண், 5,664 பெண், மூன்றாம் பாலின வாக்காளர் 2 என 10,617 வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 7,035 ஆண், 8,161 பெண், மூன்றாம் பாலின வாக்காளர் 1 என 15,197 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, பரமக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில் 1,23,549 ஆண், 1,25,697 பெண், மூன்றாம் பாலினம் 24 என 2,49,270 வாக்காளர்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,43,717 ஆண், 1,43,768 பெண், மூன்றாம் பாலினம் 242,87,509 வாக்காளர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,53,483 ஆண், 1,56,482 பெண், மூன்றாம் பாலினம் 16 என 3,09,981 வாக்காளர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,713 ஆண், 1,52,824 பெண், மூன்றாம் பாலினம் 5 என 3,05,542 வாக்காளர்கள் 5,73,462 ஆண், 5,78,771 பெண், மூன்றாம் பாலினம் 69 என 11,52,302 வாக்காளர்கள் உள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4,023, திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 3,942, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,728, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 4,504 என 15,197 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கோட்டாட்சியர் கோபு, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









