மண்டல அளவிலான வாலிபால் போட்டி செய்யது அம்மாள் இன்ஜினியரிங்  கல்லூரி ரன்னர்… 

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே 16வது மண்டல அளவிலான வாலிபால் போட்டி அமராவதி புதூர் ஸ்ரீராஜ ராஜன் இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 19 அணிகள் கலந்து கொண்டன. மூன்று ஆட்டங்களில் முறையே ராமநாதபுரம் அண்ணா பல்கலை, மதுரை தியாகராஜர், புதுக்கோட்டை மவுண்ட் ஜியோன் ஆகிய இன்ஜினியரிங் கல்லூரிகளை வென்ற ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி இறுதிப்போட்டியில் நுழைந்தது. ஸ்ரீ ராஜ ராஜன் இன்ஜினியங் கல்லூரியை இறுதிப் போட்டியில் மோதி 25 : 19, 25 : 17 என்ற புள்ளி கணக்கில் ரன்னர் இடம் பிடித்தது.

போட்டியில் வென்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுப்பையா பரிசு கோப்பை வழங்கினார். மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாட தகுதி பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, முதல்வர் முனைவர் மாரிமுத்து, உடற்கல்வி இயக்குநர் கபிலன் (எ) மகேந்திரன் பாராட்டினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!