பரமக்குடியில் வ.உ.சி பிறந்த நாள் விழா – வீடியோ செய்தி ..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம், அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் கப்பலோட்டிய தமிழன். வ.உ.சிதம்பரம் 147 வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, குடும்ப உறுப்பினர் அட்டை வழங்கும் விழா பரமக்குடியில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ராஜ் டிவி இயக்குனர் ரகுநாதன்,சென்னை அண்ணா பல்கலை., விரிவுரையாளரும் சென்னை இஎஸ்ஆர் பவுண்டேஷன் அறங்காவலர் முனைவர் இ கே டி சிவக்குமார், தென்னிந்திய வெள்ளாளர் உறவவின்முறை சங்கத் தலைவர் த.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகாசபை தலைவர் குரு.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில்திருப்பூர் தமிழ் இலக்கிய கழகத் தலைவர் அனிதா, கு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு சொற்பொழிவாற்றினார். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து வெள்ளாளர் மகாசபை கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு ராஜ் டிவி இயக்குனர் ரகுநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ராஜ் TV இயக்குனர் எம். ரகுநாதன் பரிசு வழங்கினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!