விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் மீது முகநூலில் அவதூறு பரப்பிய மீது செம்பனார்கோவில் விசிக ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பொறையார் காவல் நிலையத்தில் புகார்
அளிக்கப்பட்டது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் பேராசிரியராக பணியாற்றிவரும் செல்வராசு மகன் விஜய்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து பொறையார் காவல் நிலைத்தில் அவர்மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்தனர். மேலும் அவரை பொறையார் காவல்துறையினர் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.


You must be logged in to post a comment.