தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதன்படி தேமுதிகவினர் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேமுதிக கட்சியினர் தொண்டர்கள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் திருவண்ணாமலை மாவட்டக் கழக செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் முதலாம் ஆண்டு குருபூஜை நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்டக் கழக செயலாளர் வி.எம்.நேரு அவர்களின் ஆலோசனைப்படி கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார் மாவட்ட கலை இலக்கிய அணி பேரவை செயலாளர் பேராசிரியர் தமிழன்பிரபு செங்கம் நகரக் கழக செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் கொட்டகுளம் சு.சிவமூர்த்தி மற்றும் கொடட்குளம் ஊராட்சி நிர்வாகிகள் டைலர் ஏழுமலை, மணிகண்டன் (எ) ராஜா, ஐயப்பன் சேகர், ராஜேந்திரன், மணிகண்டன் , தங்கராஜ் எம்ஜிஆர் நகர் துரை மேஸ்திரி மற்றும் கேப்டன் அன்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்
You must be logged in to post a comment.