வேலூர் VIT பல்கலைகழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 3 நாள் தேசிய மாநாட்டை தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று (27/12:2018) புரோகித் துவக்கி வைத்தார். இம்மாநாட்டிற்கு இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
இந்த இந்திய பொருளாதார சங்கத்தின் 101-வது ஆண்டு மாநாடு ஆகும். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், பேராசிரியர் மகேந்திர தேவ், டாக்டர் சந்திரமோகன் பொருளாதாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை VIT சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின் வணிகவியல் துறை செய்து இருந்தது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்



You must be logged in to post a comment.