வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாகி உள்ளது.இதனால், படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள், பால் அபிஷேகம் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளை வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் வேலூர் அலங்கார் திரையரங்கில், நேற்றிரவு முதல் ஆடல், பாடல் என அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர். பின்னர், சிறப்பு காட்சி தொடங்கியதும், திரையரங்கில் சீட் பிடிக்க ஏற்பட்ட தகராறில் பிரசாந்த், மற்றும் அவரது மாமா ரமேஷுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால், திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் இன்னொரு பகுதியில் கட்அவுட்டுக்கு பால் உற்ற ஏறிய ரசிகர் மீது கட்அவுட் சரிந்து விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
எங்கே செல்கிறது இளைய சமுதாயம்..??

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









