திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சகிலா திடீர் ஆய்வு செய்தார்.மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்த முதல் நாளில் வட்டார கல்வி அலுவலர் ஷகிலா திடீரென வருகை புரிந்து இறைவணக்க கூட்டத்தை பார்வையிட்டு பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் குறித்து மாணவ,மாணவிகளிடம் படிக்க சொல்லி சோதித்தார். நிகழ்வின் முன்னதாக தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் காலை உணவு தரமான முறையில் சமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு மாணவர்களோடு உணவு சாப்பிட்டார் பின்னர்,தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை ஜெ.பால் சவுத் ஆசியா நிறுவனம் இணைந்து நடத்தும் மேக்ஸ் டேலண்ட் திட்டத்தில் தேர்வான ஏழாம் வகுப்பு மாணவர்கள் கனிஷ்கா, பிரகாஷ்ராஜ், காவியா ஆகியோருக்கு வட்டார கல்வி அலுவலர் தமிழக அரசின் டேப் வழங்கி பாராட்டு தெரிவித்தார் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி ,ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு, தேன்மொழி, ஆறுமுகம், சாந்தி, சுதா, ராஜாராம், மேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வட்டார கல்வி அலுவலர் மேல்பெண்ணாத்தூர் தொடர்ந்து பூங்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கல்தாம்பாடி தொடக்கப்பள்ளி பல்வேறு பள்ளிகள் ஆய்வு மேற்கொண்டார்

You must be logged in to post a comment.