விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலருக்கு பொன்னாடை போர்த்தி பண முடிப்பு கொடுத்து கவுரவம்..
விருவீடு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் ரபிக்ராஜா தான் பணியாற்றிய அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர்.
இதற்கு முன்னர் பணியாற்றிய பட்டிவீரன் பட்டி காவல்நிலையத்தில் நீதிமன்ற பணிகளை மிகவும் சிறப்பாக திறம்படச் செய்து வழக்குகளை உரிய முறையில் உரிய நேரத்தில் கையாண்டதற்காக நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இடத்தில் நன்மதிப்பு பெற்றவர்.
தற்போது பணியாற்றி வரும் விருவீடு காவல்நிலைய எல்லையில் இவரும் முதல் நிலைகாவலர் காளிதாஸ் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சேடப்பட்டி ஏடி காலனி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை பரிசோதனை செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திருட்டு பொருட்கள் உடன் நான்கு நபர்களை உடனடியாக கைது செய்தனர்.
சிறப்பாகவும் வேகமாகவும் செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ரபிக்ராஜா மற்றும் முதல் நிலை காவலர் காளிதாஸ் ஆகியோரை உற்சாகப்படுத்தும் விதமாக, விளாம்பட்டி காவல் ஆய்வாளர் சர்மிளா இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்து பணமுடிப்பையும் பரிசாக வழங்கினார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









