உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..
மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் உடைய தாக்கம் தான் 40க்கு 40.
இழுபறியில் வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு;
ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு விதமாக நடைபெறும் இறுதியாக யார் வெற்றி பெறுகிறார் என்பதுதான் முக்கியம். இழுபறியை பற்றியோ அல்லது இரண்டாவது இடத்தை பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. இது நாடாளுமன்றத் தேர்தல் முறை. விருதுநகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு:
அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யாமல் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதன் விளைவாக அதிமுகவின் வாக்குகள் பாஜகவிற்கு செல்கின்றது. இது மிகவும் ஆபத்தானது ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர்கள் பதற வேண்டும்.
இந்தியா கூட்டணி அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு:
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆறு மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார்கள் அதன் பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பார்கள் .
ராமர் கோயில் உள்ள அயோத்தி இலையே பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு:
உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









