ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்திலிருந்து இளம்பெண் இருசக்கர வாகனத்தில் கடத்தல்;பெண் வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம்,5 பேர் கைது..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்திலிருந்து இளம்பெண் இருசக்கர வாகனத்தில் கடத்தல்;பெண் வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம்,5 பேர் கைது..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி அருகே காலனி பகுதியைச் சேர்ந்த மாதவன் – பெத்தலின், தம்பதியின் மகளான யவனம் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான பவித்திரன் கோயமுத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் யவனத்தை இரண்டு மூன்று தடவை பெண்கேட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். பெண் கொடுக்க மறுத்த நிலையில் இன்று பவித்திரன் மற்றும் பவித்திரன் தம்பி வெங்கடேசன் மற்றும் அவரது உறவுக்கார பெண் ஒருவர் மற்றும் இருவர் என மல்லி காலனி பகுதியில் உள்ள இளம் பெண் வீட்டிற்கு சென்று பெண்ணை கடத்த முயற்சி செய்துள்ளனர்.

அப்பொழுது இளம் பெண்ணின் தாய் பெத்தலின் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்துள்ளனர். இவர்களை அடித்து கீழே தள்ளி விட்டு பவித்ரன் மற்றும் வெங்கடேசன் இளம்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக இழுத்து அமரவைத்து சிவகாசியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது இளம் பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.அப்பொழுது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கடத்துவதற்காக பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருந்த கார் மூலம் இளம்பெண்ணை கடத்தி கொண்டு வந்துள்ளனர். இந்த கடத்தல் சம்பந்தமாக இளம் பெண்ணின் தகப்பனார் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் அவர்களிடம் அவசர அழைப்பு எண் மூலம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இளம் பெண்ணின் தகப்பனார் புகார் கொடுக்கும் பொழுது கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் என் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பெயர் என முழு விவரத்தையும் கொடுத்துள்ளார். இவர்களுடைய லொகேஷன் கண்காணிக்கப்பட்டு இவர்கள் வாகனம் ராஜபாளையம் வடக்கு மலையடி பட்டி பகுதியில் வந்ததை கண்டறிந்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் வடக்கு மலையடிப்பட்டி பகுதிக்கு சென்று பலஇடங்களில் தேடி கடத்தல்காரர்கள் மற்றும் இளம்பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். அது சமயம் மலையடிப்பட்டி பகுதியில் உறவினர் வீட்டில் அந்த பெண்ணை வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்கள் அவசரமாக பெண்ணை கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர். போலீசார் இவர்களை தடுத்து பெண்னை மீட்டு முதல் உதவிக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனை கொண்டு சென்றனர். அந்தப் பெண்னை கடத்தலில் ஈடுபட்ட பவித்திரன் ,வெங்கடேசன் உறவுக்காரப் பெண் ஒருவர் மற்றும் 2 ஆண்கள் என 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்னை மீட்ட தகவலை பெற்றோரான மாதவன்- க்குதகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து தற்போது அந்தப் பெண்ணை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடத்தல் குற்ற வழக்கில் வேறு எதும் நபர்கள் சம்பந்தப்பட்ட உள்ளனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடமான தேசிய நெடுஞ்சாலை, வடக்கு மலையடிபட்டி , அரசு மருத்துவமனை என பல இடங்களில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!