விருதுநகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3083 குடும்பங்களிடம் கள ஆய்வு செய்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்..!

விருதுநகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3083 குடும்பங்களிடம் கள ஆய்வு செய்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்..!

ஊரடங்கு காலத்தில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பலர் அடிப்படை அத்தியாவசிய பொருட்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது இது குறித்து விருதுநகர் மாவட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3083 குடும்பங்களிடம் கள ஆய்வு செய்து அதன் மூலம் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினார்கள்.

மேலும் அந்த அறிக்கையில் நியாயவிலை கடையில் அரசி அட்டை தாரர்களுக்கு ரூபாய் 7500 மத்திய அரசும் ரூபாய் 5000 மாநில அரசும் வழங்க வேண்டும்  தலா ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ உணவு தானியம் 6 மாத காலத்திற்கு வழங்க வேண்டும் மேலும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்றி 600 ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!