நவீன விவசாய இயந்திரம் மூலம் கிராமங்கள் தோறும் இலவசமாக கிருமி நாசினி தெளித்து வரும் மென்பொறியாளர்!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேலத்துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் மென்பொறியாளர் கி௫ஷ்ணகுமார்.
பெங்களூ௫வில்வேலை பார்த்து வரும் இவர்,தற்போது அலுவலகம் செயல்படாமல் உள்ளதால் தனது சொந்த கிராமத்தில் இருந்தே அலுவலக பணியாற்றி வருகிறார்.
மேலும் விவசாய பின்னனி கொண்டவரான இவர் கொரோனா தடைக்காலத்தில் டாபே டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆயிரம் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை இலவசமாக உழவு செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தனது கிராம மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் இந்தியாவில் பஞ்சாப், மகாராட்டிர போன்ற மாநிலங்களில் திராட்சை தோட்டங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தும் நவீன இயந்திரமான பன்முகத்திறன் கொண்ட டிராக்டர் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் அரசு கொடுக்கும் மருந்தை பயன்படுத்தி இலவசமாக ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.
பேராலி,மல்லாங்கிணறு,துலுக்கன் குளம்,கல்குறிச்சி என 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளித்து வ௫கிறார்.இது குறித்து கிருஷ்ண குமார் தெரிவிக்கையில், எங்கள் கிராமங்களில் கொரோனா தொற்று இல்லை என்றாலும் வரும் முன் காப்போம் என்பதை போல் நவீன இயந்திரம் கொண்டு கிருமி நாசினி தெளித்து வருவதாகவும்,இதற்கு டாபே டிராக்டர் நிறுவனம் உதவி செய்து வருவதாகவும்,மருந்து தவிர மற்ற செலவுகள் அனைத்தும் தங்கள் நண்பர்கள் மூலம் திரட்டி இப்பணி செய்து வருவதாக தெரிவித்தார்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.