கொரோனா ஊரடங்குக்கு பின் தனியார் விசைத்தறி உற்பத்தியாளர்களின் கூலி குறைப்பு செய்து இருப்பதாக கூறி நெசவு கூலித் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் கோரோனோ வைரஸ் பரவுதலை தடுக்க விதிக்கப் ஊரடங்கால் கடந்த 60 நாள்களாக வேலையின்றி சிரமப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு காரணமாக விசைத்தறி இயங்க அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து கடந்த 10 நாள்களாக விசைத்தறி செயல்பட்டு வரும் நிலையில் தனியார் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சேலை ஒன்றுக்கு ரூபாய் 10 முதல் 40 ரூபாய் வரை கூலி குறைத்து இருப்பாதகவும் மேலும் நாள் ஒன்றுக்கு 4 சேலை உற்பத்தி செய்து வந்த நெசவாளர்கள் தற்போது ஒரு சேலை நெசவு செய்தால் போதும் என்ற கட்டுப்பாடும் விதித்து இருப்பதாகவும் இதன் காரணமாக நெசவாளர்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூலி குறைப்பு செய்வதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் தங்கள் பகுதிகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் நிர்வாகம் தனியார் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூலி குறைப்பு செய்வதை தடுக்க வேண்டும் எனவும் இல்லை எனில் போராட்டங்கள் தொடரும் எனவும் நெசவாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.