திருப்பரங்குன்றத்தில் சமூக இடைவெளி காற்றில் பறந்த கந்தசஷ்டி கவசம் பாடல் நிகழ்ச்சி..

திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் பூஜை கற்தசஷ்டி கவசம் பாடிய நிகழ்சியில் சமூக இடைவெளியின்றி 500 பேருக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  மாநில நிர்வாகி சீனிவாசன் தற்போது கொரானா தொற்றிவிருந்து விடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பாஜக சார்பில் வேல் பூஜை நடத்தி , பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.  கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தி பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் பாஜக சார்ந்த  பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், போராட்டங்களும் நடத்தினர்.

அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாஜகவினர் சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரண்டனர். கந்தசஷ்டி கவசம் வேல் பூஜை செய்து , பெண்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன்புள்ள சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளில் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர், இதில் சமூக இடைவெளியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!