ஜெயஶ்ரீ எனும் சிறுமி முன்னால் அதிமுக கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரால் எரித்து கொலை INTJ தலைவர் கடும் கண்டனம்..

ஜெயஶ்ரீ எனும் சிறுமி முன்னால் அதிமுக கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரால் எரித்து கொலை INTJ தலைவர் கடும் கண்டனம்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.

விழுப்புரத்தில் வசித்து வரும் ஜெயபால் அவர்களின் மகள் ஜெயஶ்ரீ. அதிமுக முன்னால் கவுன்சிலர் முருகனுக்கும் இச்சிறுமியின் தந்தை ஜெயபாலுக்கும் நடந்த தொடர் பகையினால் இந்த கொடூர சம்பவம் அறங்கேறியுள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டனர்.

இதற்கு முன் தமிழகத்தில் பல முறை பலரை எரித்து கொலை செய்யப்பட்டதின் தொடர்தான் இந்த கொடூர சம்பவமும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை வெறுமன சிறையில் அடைத்து பின் விடுவிக்கபடும் நிலைதான் இது போன்ற செயல்களை ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் குற்றங்களை செய்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இனி இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர்களுக்கு கடுமையாண தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சிறுமிக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும்,அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசு நீதி செலுத்த வேண்டுமெனில் உடனடியாக குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும் ஜெயஶ்ரீயின் குடும்ப்த்திற்கு குற்றவாளிகளிடம் இருந்து நஷ்டயிடு பெற்று தர வேண்டும்.அது போல் அல்லாமல் சிறையில் அடைப்பதினால் ஒரு போதும் இது போன்ற குற்றங்கள் குறையாது.இது போன்ற சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இப்படிக்கு எஸ்.எம்.பாக்கர் தலைவர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!