விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் 07/10/18 இன்று நடைபெற்றது.
பெத்தானூர், கனியாமூர், ராயர்பாளையம், பிருதிவி மங்கலம், தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சித்தலூர், பாளையங்கால், வேங்கைவாடி, குடியநல்லூர் மற்றும் உடையநாச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெயர்சேர்த்தல், திருத்தம்,நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் தொடர்பான இந்த சிறப்பு முகாம்களை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் திரு.தினேஷ் அவர்கள் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் கள்ளக்குறிச்சி மண்டல துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் உடனிருந்தார்.
தகவல்:-அபுபக்கர்சித்திக்
செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )





You must be logged in to post a comment.