இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வோளனூர் கிராமத்தில் கிரியேட் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஒரு நாள் செயல் விளக்கப் பயிற்சி முகாம் ஆலமரத்தடியில் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் நடைப்பெற்றது.
இப்ப பயிற்சியில் விவசாயிகளுக்கு மனித ஆரோக்கியம், மண் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பற்ற இரசாயன உள்ளீடுகளின் மீதான வெளிச் சார்பை விவசாயிகள் எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் , பண்ணை மற்றும் கிராம மட்டங்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பத்திற்கு மேற்பட்ட வெவ்வேறு உயிர் உள்ளீடு தயாரித்தல் மற்றும் பயன்பாட்டு முறைகள் பற்றியும் பயிற்சிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்கானிக் பயிற்சியாளர் ஏகாம்பரம் விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கிரியேட் தலைவர் பேராசிரியர் துரைசிங்கம், திட்ட இயக்குநர் சுரேஷ் கண்ணா, கிரியேட் திட்ட அலுவலர் சதீஷ் குமார் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் அரசுத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
இறுதியில் விவசாயிகளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறப்பாக பதில் கூறியவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு சாந்தி ஜெயசித்ரா இரண்டாவது பரிசு சங்கீதா மூன்றாம் பரிசு தனலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் வழங்கினர்.
இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயளாலர் பாக்கர் அலி மற்றும் இராமநாதபுரம் மகளிர் ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.
You must be logged in to post a comment.