*2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது*
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் தனது தந்தை பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்தவர் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் (36) புகார்தாரரிடம் இருந்து 3 ஆயிரம்
லஞ்சமாக கேட்டு அதில் ஆயிரம் முன்பணமாக G-pay மூலம் நேற்று பெற்று மீதம் உள்ள 2 ஆயிரம் கொடுக்க விருப்பம் இல்லாமல் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து ரசாயனம் தடவிய 2000 பணம் வாங்கும்போது கிராம நிர்வாக அலுவலர் சரவணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மேற்படி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.