வரும் 28 (டிச) மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினம்! முதல்வருக்கு அழைப்பு கொடுத்த விஜய பிரபாகரன்..

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்  தே.மு.தி.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ்  பார்த்தசாரதி, விஜயகாந்த் அவர்களின் மகன் வி.விஜய பிரபாகரன்,  இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து,  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க  அழைப்பு விடுத்தனர்.

அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!