இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புனித அக்னி தீர்த்த கடற்கரையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மறைந்த அவருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் நேற்று அவரது நினைவிடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணை காசி மற்றும் ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட இருந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து முறைப்படி அவரது மண் வைத்து பூஜைகள் செய்து பிண்டங்கள் வைத்து அக்னி தீர்த்த கடற்கரையில் கரைக்கப்பட்டது .இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டு பூஜை செய்தனர் . குறிப்பாக தேமுதிக மாவட்ட செயலாளர் இஸ்லாமியராக இருந்தாலும் தன்னுடைய தலைவருக்காக இந்து முறைப்படி பூஜைகள் செய்து கடற்கரையில் தீர்த்தமாடி கரைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



You must be logged in to post a comment.