இராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (14/02/2019) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்ளாக பத்திர பதிவிற்கு அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனடிப்படையில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னி கிருஷ்ணன், ஆய்வுக்குழு அலுவலர் ஷேக் முகைதீன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர் , வானதி
ஆகியோர் தலைமையில் ராமேஸ்வரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனைக்கு இன்று மாலை அங்கு சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதையறிந்த பத்திரப் பதிவு ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அலுவலகத்தில் திடீர் சோதனையை லஞ்சப் போலீசார் தொடங்கினர். அங்கிருந்த சார் பதிவாளர் (பொறுப்பு) திருமலை உள்ளிட்ட ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கணக்கில் வராத ரொக்கத்தை கைப்பற்றினர். தற்போது அலுவலகத்தை பூட்டி விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









