முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர், திருமாச் செழியனுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு..

முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர், திருமாச் செழியனுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு..

திண்டுக்கல் மைய மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த பெ.ச.திருமாச்செழியன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்படி பொறுப்பில் இருந்தவர்.

வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளார், இருந்தாலும் கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருகிறார்.

திருச்சியில்26/01/2024 அன்று திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தொண்டர்களுக்கு, தமது குடும்பம் சகிதமாக தமது சொந்த செலவில் வெஜ் பிரியாணி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்து தந்துள்ளார்.

மேலும் டெல்லி சென்றுள்ள தொல். திருமாவளவன் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து தமது மகளின் (மருத்துவர்) முதல் மாதம் வாங்கிய சம்பளத்தில் ஒரு தொகையை கட்சி வளர்ச்சி பணிக்காக தொல். திருமாவளவன் கையில் கொடுத்துள்ளார்.

ஆர்வமாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் கட்சியின் பணிகளை  சிறப்பாக செய்து வருவதாக தொல். திருமாவளவன் அவர்கள் திருமாச் செழியனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!