கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 10, +2மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர, முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றர்.
கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் ஒரு மாணவன் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் கல்வி மிகவும் அவசியம். நாட்டினுடைய வளர்ச்சி, தொழிற்புரட்சியில் உள்ளது. தொழிற்புரட்சிக்கு பொறியியல் படிப்பு மிக அவசியம் எனவே பொறியியல் பட்டதாரிகளாக படித்து வருங்கால சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தி எங்கள் கல்லூரியில் பொறியியல் பாடம் கற்றுதருவதோடு Cloud Computing, CISCO Networking, CADD, Big Data, Data Mining, Embedded System ஆங்கிலப்புலமையை பயிற்றுவித்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான தனித்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்து கொடுக்கின்றோம் என தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ஜெயா டிவி புகழ் பேராசிரியர்கள் அனந்த நாராயணன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களாகிய நீங்கள் இந்த கல்வி வழிகாடடி நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கல்லூரியில் பொறியியல் துறையில் சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே பொறியியல் துறை மாணவர்களுக்கு வருங்காலத்தில் பிரகாசமான வேலைவாய்ப்பு காத்துக்கொண்டு இருக்கிறது, அதன் மூலம் சிறந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்க வேண்டுமென வாழ்த்தினார்கள்.வகல்லூரியின் கணினி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துணைப் பேராசிரியர் அகமது ஹுசைன் ஆசிப் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கக்கூடியது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய இயற்பியல் பிரிவு ஆசிரியர், தங்க பாண்டியன் அரசு உயர்நிலைப் பள்ளி, சாத்தனூர், வேதியியல் பிரிவு ஆரோக்கிய பன்னீ செல்வம், அரசு உயர் நிலைப் பள்ளி. கீழத்தூவல் கணித பிரிவு ஆசிரியர், நவநீத கிருஷ்ணன் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம் ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர்.
மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயறடசியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் முஹம்மது தஸ்தகிர் மெடரிக் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை அனைத்து ஹமீதியா பள்ளிகள் அனைத்து இஸ்லாமியா அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, மேலும் ஏர்வாடி, சிக்கல், கன்னிராஜபுரம், சாயல்குடி, வண்ணாங்குண்டு, திருப்புல்லாணி, மாரியூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் 10, +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர். கட்டிட கலைத்துறையின் சிறப்புகள் பற்றி அத்துறை துணைப் பேராசிரியர் ரமேஸ் எடுத்துரைத்தார். இயந்திர பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கனகசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன், கார்த்திகேயன், ஷேக்யூசுப், மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர். 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











