இராமநாதபுரத்தில் பாம்பு பிடி தொழிலாளியை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ஹரிராமன். இவரது மனைவி மூக்கம்மாள். இவர்கள் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு இராமநாதபுரம் வந்த இவர்கள் தங்களது உறவினர்களுடன் கும்பலாக இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இரவு தூங்கினர். அந்த வழியாக ராமநாதபுரம் பசும்பொன் நகர் கோவிந்தராஜன் வீட்டிற்கு சென்றார். மின் விளக்கொளியில் மூக்கம்மாளை பார்த்த கோவிந்தராஜன் அவருக்கு பாலியல் சில்மிஷம் செய்ய முயன்றார். மூக்கம்மாள் கூச்சலிட்டதால் ஹரிராமன் விழித்தார். ஹரிராமனுக்கும், கோவிந்தராஜனுக்கும் இடையே வாய்த் தகராறு முற்றியது இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன் ஜாதியை சொல்லி திட்டி ஹரி ராமன் தலையில் கல்லை தூக்கி போட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த ஹரிராமன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து மூக்கம்மாள் புகாரின்படி ராமநாதபுரம் டவுன் போலீசார் கோவிந்தராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வன்கொடுமை, கொலை இரண்டிற்கும் சேர்த்து கோவிந்தராஜானுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!