மதுரை பசுமலையில் தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட போகும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியை திமுக மதுரை மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வும் மான கோ தளபதி ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய எம்.பி சு.வெங்கடேசன் கூறும் போது-தமிழ்நாட்டில் நம் தளபதி அவர்கள் பாஜக அணியால் கடைசி வரை ஆட்டவும் முடியாமல் அசைக்கவும் முடியாமல் இரும்புக்கோட்டையை போல இந்தியா கூட்டணி தமிழ்நாட்டிலே இருக்கிறது 40 தொகுதிகளும் மகத்தான வெற்றி பெறும் என்பது அவற்றின் மூலமாக இந்தியாவுக்கு சொல்லுகிற உண்மை..எனவேதான் அரசியல் அரங்கில் தென்னகத்தின் குரல் தமிழகத்தின் குரல் பாசிச பாஜகவுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது கடந்த ஐந்து ஆண்டுகளும் இந்தியாவுக்கான தேவையை பேசியவர்கள் யார் என்று பார்த்தால் தமிழ்நாட்டினுடைய 40இல் 39 எம்பிக்கள் தான் இந்தியாவை காப்பாற்றுகிற பெருமையை செய்தார்கள்.இந்த கூட்டணியினுடைய குரல் தான் அங்கே ஒழித்தது அந்த குரல் மீண்டும் ஒழிக்க பாசிச பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மிக மாபெரும் ஒரு அரசியல் போராட்டக் களத்தில் நாம் நிற்கின்றோம் அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தல் இதுவரை நாம் காப்பாற்றி வந்த மாண்பையும் மரபையும் காப்பாற்றுகிற தேர்தல் நீங்கள் பார்த்தால் தெரியும் தெருவிலே ஒரு சமூக விரோதி கடைக்கு ஆள் அனுப்பிவிட்டு மிரட்டி விட்டு பின்னால் போய் பணம் பறிப்பானே அதைப்போல இடி ரெய்டு செய்து விட்டு பின்னாலே போய் ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தை கைமேல் வாங்குகின்றனர்.இவ்வளவு மோசமான ஒரு அரசியல் சக்தி இந்திய வரலாற்றில் இதுவரை கிடையாது இதை துடைத்து எரிகிற வரை ஒரு ஜனநாயகத்தை விரும்புகிற யாரும் ஒரு நிமிடம் கூட ஓயப் போவதில்லை என்பதையும் சொல்லி அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மதுரையினுடைய கட்டுமானத்திற்காக செய்யப்பட்டிருக்கிற வேலைகள் கடந்த 10 ஆண்டுகள் செய்யப்பட்ட வேலையை விட அதிகம் என்பதை நெஞ்சம் நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.உங்களுக்கு தெரியும் கீழடியில் கீழடி அகழாய்வு தொடங்கி 8 ஆண்டுகளானது ஆனால் ஒன்றும் நடக்கவில்லை இன்றைக்கு உலகமே வியக்கிற அருங்காட்சியளத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையிலான அரசு அமைந்த பிறகு தான் இன்றைக்கு கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது இதுதான் மக்களின் சாதனை.தளபதியார் ஆட்சியில் இரண்டாவது சிப்காட் மதுரைக்கு என்று அறிவிக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. 25 ஆண்டு கால தொழில் முடக்கத்தை முறிக்கிற அரசாக திராவிட முன்னேற்ற கழகம் மதுரைக்கு தந்திருக்கிறார். இரண்டாவதாக மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்ற வேண்டும் என்று கேட்டவுடன் முன் வந்து இன்னைக்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் 38 ஏக்கர் கொண்ட அந்த இடம் மதுரையினுடைய கட்டுமானத்தின் செழிப்புக்கு சான்றாக அமையப்போகிறது என்பதை நாம் பார்க்க இருக்கின்றோம்.அந்த உற்சாகத்தில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம் மதுரையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









