வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கோயில் விசேஷங்கள்…

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ.பக்த ஆஞ்சநேயர் கோவிலில்  இரவு திருவோண தீப நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமாளின் திருநட்சத்தம் திருவோணம் திவ்ய தேச கோவில்களில் செய்யப்படுகிறது. சிவனுக்கு எப்படி பிரதோஷ பூஜை உகர்ந்ததே அதேப்போல் பெருமாளுக்கு திருவோணம், இக்கோவிலில் கல்யாண ரங்கநாதர் மற்றும் கல்யாண ரங்கநாயகிக்கு பால், சந்தனம்,மஞ்சள் தயிர் இளநீர் மற்றும் கலச தீர்த்தம் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு ஃ பிரதஷனம் நடந்தது. வேத மந்திரங்களை பிராமணர்கள் ஓதினர். தீப ஆரானை நடைபெற்றது பின்பு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். திருவோண தீப நிகழ்ச்சியை கோவில் அர்ச்சகர்கண்ணன் பட்டாட்சியர் முன்னின்று நடத்தினார். முடிவில் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.

அதே போல் வேலூர் அரியூர் கார்த்திக் நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலையத்தில் விஜயதசமி பெருவிழா நடைபெற்றது. காலை ஆர்த்தி அபிஷேகம் நைவேத்தியம் மத்தியம் மற்றும் மாலை ஆர்த்தி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது  இரவு விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் சாவடி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஏற்பாட்டை ஷீரடி ஸ்ரீ சாய் மகராஜ் டிரஸ்ட் செய்து இருந்தது.

கே எம்.வாரியார்:- வேலூர் மாவட்ட செய்தியாளர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!